Ablum


: 24-11-2020
: 1 month ago

காட்பாடி சட்டமன்றத் தொகுதி, வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திநகர், காங்கேயநல்லூர், விருதம்பட்டு, ராதா கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் #குண்டும்_குழியுமாக இருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் திரு.துரைமுருகன்MA.BL.,MLA அவர்களிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர் அதன்பேரில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்மார்ட் சிட்டி குழு துணைத்தலைவர் திரு.டி.எம்.கதிர்ஆனந்த்MP அவர்கள் மாநகராட்சி பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் பொறியாளர், 1வது மண்டல அலுவலர், தமிழ்நாடு குடிநீர் வாரிய அலுவலர் நெடுஞ்சாலைத்துறை பாதாள சாக்கடை திட்ட ஒப்பந்ததாரர் எல்.என்.டி அலுவலர்களை அழைத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள சாலைகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அதிகாரிகளும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் முடித்து தருவதாக உறுதி அளித்தனர் ஆய்வின்போது உடன் மாவட்ட பொருளாளர் சி.நரசிம்மன் தேர்தல் பணிக்குழு செயலாளர் டாக்டர் விஜய் காந்தி நகர் பகுதி கழக செயலாளர் பரமசிவம் வட்டக் கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


: 11-11-2020
: 2 months ago

வேலூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சத்துவாச்சாரி (ஆர்.டி.ஓ ஆபீஸ் முதல் கெங்கையம்மமன் கோவில் வரை) சுரங்கப்பாதை (Subway) அமைக்கும் பணிக்காக தொடக்க விழாவில் (பூமி பூஜை) வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார். உடன் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.சண்முகசுந்தரம் , வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப .கார்த்திகேயன், மாவட்ட அவைத்தலைவர் திரு.தி.அ.முகமது சகி, தேர்தல் பணிக்குழு தலைவர் திரு.டாக்டர்.விஜய் * *திரு.பா.நீலகண்டன், முன்னாள் ஒன்றிய செயலாளர் திரு.ஆர்.பி. ஏழுமலை, பகுதி கழகச்செயலாளர்கள், மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், கழக நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


: 25-10-2020
: 2 months ago

சொன்னதை செய்து காட்டிய துரைமுருகன் மகன்..!


: 03-10-2020
: 3 months ago

வேளாண்மை சட்டங்களை எதிர்த்து, மத்திய ,மாநில அரசுகளை கண்டித்தும் வாணியம்பாடி, கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர்ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினார்


: 03-10-2020
: 3 months ago

வேலூர் ஸ்மார்ட் சிட்டி குறித்து ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சண்முகசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.கார்த்திகேயன் அவர்கள் மாநாகராட்சி ஆணையாளர், மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


: 03-10-2020
: 3 months ago

வேலூர் ஸ்மார்ட் சிட்டி குறித்து இரண்டாம் நாள் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சண்முகசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.கார்த்திகேயன் அவர்கள் திரு. முரளி வெங்கடசுப்பு, மாநாகராட்சி ஆணையாளர் திரு. சங்கர், மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


: 03-10-2020
: 3 months ago

காந்தி ஜெயந்தி முன்னிட்டு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் குடியாத்தத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்


: 03-10-2020
: 3 months ago

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வடக்கு ஒன்றியம் சீவூர் ஊராட்சி, கள்ளூர் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்.MP அவர்கள் கலந்துக் கொண்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள்


: 03-10-2020
: 3 months ago

வேளாண் சட்டத்திற்கு எதிராக மக்களிடையே கொந்தளிப்பு


: 16-09-2020
: 4 months ago

பேரறிஞர் அண்ணா அவர்களின் 112வது பிறந்தநாள் முன்னிட்டு டெல்லி தமிழ் நாடு இல்லத்தில் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர்ஆனந்த்MPஅவர்கள் பேரறிஞர் அண்ணா வின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.


: 16-09-2020
: 4 months ago

இன்று, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் முன்னதாகவே நீட் நுழைவுத் தேர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தின் முன் அனைத்து கட்சிகள் சார்பில் நீட் நுழைவுத் தேர்வை கண்டித்தும், ரத்து செய்ய வலியுறுத்தியும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர்ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டப்போது.


: 12-09-2020
: 4 months ago

மோர்தானா அணை நிரம்பிவருவதால் நீர்வரத்து கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் கேந்திரியா வித்யாலயா பள்ளிக்கு 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சண்முகசுந்தரம் அவர்களை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் நேரில் சந்தித்து மனுக்களை வழங்கினார்.