வேலூர் ஸ்மார்ட் சிட்டி குறித்து ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சண்முகசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.கார்த்திகேயன் அவர்கள் மாநாகராட்சி ஆணையாளர், மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேளாண்மை சட்டங்களை எதிர்த்து, மத்திய ,மாநில அரசுகளை கண்டித்தும் வாணியம்பாடி, கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர்ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினார்
பேரறிஞர் அண்ணா அவர்களின் 112வது பிறந்தநாள் முன்னிட்டு டெல்லி தமிழ் நாடு இல்லத்தில் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர்ஆனந்த்MPஅவர்கள் பேரறிஞர் அண்ணா வின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இன்று, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் முன்னதாகவே நீட் நுழைவுத் தேர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தின் முன் அனைத்து கட்சிகள் சார்பில் நீட் நுழைவுத் தேர்வை கண்டித்தும், ரத்து செய்ய வலியுறுத்தியும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர்ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டப்போது.
மோர்தானா அணை நிரம்பிவருவதால் நீர்வரத்து கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் கேந்திரியா வித்யாலயா பள்ளிக்கு 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சண்முகசுந்தரம் அவர்களை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் நேரில் சந்தித்து மனுக்களை வழங்கினார்.