ஒன்றுப்படுவோம் ஊரடங்கை விரிவாக கடைபிடிப்போம் கொரோனவை ஒழித்துக்கட்டுவோம்...
காட்பாடி, மெட்டுக்குளம் சோதனைச்சாவடியில் தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்கள் பரிசோதிக்கப்படுகிறதா மற்றும் வாகனங்களில் பயணிக்கும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரிவர மேற்கொள்ளப்படுகிறதா என்பதை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார், பிறகு அவர்களை கைக்கவசம் மற்றும் முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தினார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு டாக்டர்.அப்துல் கலாம் சாரணர் இயக்கம், சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மற்றும் தாராபடவேடு மகளிர் குழு கூட்டமைப்பு சங்கம் இணைந்து காட்பாடி இரயில் நிலையம் மற்றும் உழவர் சந்தை பகுதி தூய்மை படுத்தும் பணியை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.
இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற Parliamentary Constituency Committee For Road Safety - District Level Review Meeting வேலூர் பாராளுமன்ற தொகுதி சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் சாலை பாதுகாப்புக்குழு தலைவர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி பேசினார்.